குடும்ப தகராறில் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு... திருவள்ளூர் அருகே நிகழ்ந்த சோகம்..!
Woman Committed Suicide In Thiruvaallur
குடும்பப் பிரச்சினை காரணமாக இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கோவிந்தா என்பவர் தனது மனைவி பவானியுடன் திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரியில் நடைபெறும் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டு வந்தார். இவர்கள் இருவரும் காந்திபுரத்தில் தங்கியிருந்தனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படும் எனக் கூறப்படுகிறது.
சம்பவத்தன்று இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.இதனால் மன உளைச்சல் அடைந்த பவானி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
Woman Committed Suicide In Thiruvaallur