மாமியாருடன் தகராறு.. மகளுடன் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு...! - Seithipunal
Seithipunal


குடும்ப தகராறு காரணமாக குழந்தைகளுடன் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம், சேனை  பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். இவருக்கு திருமணமாகி குறிஞ்சி தமிழ் என்ற மனைவியும் இரு மகள்களும் உள்ளனர். குறிஞ்சி தமிழழுக்கும் அவரது மாமியாருக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்படும் என கூறப்படுகிறது.

இந்நிலையில், சம்பவதன்று இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், மன உளைச்சலுக்கு உள்ளான குறிஞ்சி அவரின் மகள்களுடன் அறையில் சென்று தாழிட்டு கொண்டார்.

சிறிது நேரத்திற்கு பின் ராஜேஷை தொடர்பு கொண்ட அவரது தாயார் அவர் அறையில் சென்று தாழிட்டத்தை கூறியுள்ளார். விரைந்து வந்த அவர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது மனைவி மற்றும் மகள்கள் தூங்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவர்களின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவ்ம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Woman Committed Suicide With her Children In Salem


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->