தூத்துக்குடி || ரயில் பயணம் செய்த போது தவறி விழுந்த மூதாட்டி பரிதாப பலி..!
Woman Death Who travel in Steps Of Train
ரயிலியில் இருந்து தவறி விழுந்த பெண் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துகுடி மாவட்டம், திருத்தணியில் இருந்து மின்சார புறநகர் ரெயில் ஒன்று திருவள்ளூர் வழியாக சென்று கொண்டிருந்தது. அந்த ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் படிகட்டில் நின்று கொண்டிருந்தார். எதிர்பாராத விதமாக அவர் ரயிலில் இருந்து தவறி விழுந்துள்ளார்.
இதில், அவருக்கு தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ரயில் மற்றும் பேருந்தில் பயணம் செய்யும் போது படிக்கட்டுகளில் சாகசம் செய்வது, பயணம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.
English Summary
Woman Death Who travel in Steps Of Train