மதுரை || அண்ணன் உடலை கட்டியணைத்து அழுத தங்கை - நொடியில் உயிரைவிட்ட சம்பவம்.! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி அருகே குளத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பிச்சை. சுமை தூக்கும் தொழிலாளர் சங்கத்தின் செயலாளராக இருந்த இவர், நேற்றிரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இவரது இறப்பு செய்தியை அறிந்து அவரது உடலை பார்க்க வந்த பிச்சையின் தங்கையான நக்கலப்பட்டியைச் சேர்ந்த தங்கம்மாள் அண்ணனின் உடலை கட்டி அணைத்து அழுதுள்ளார். அப்போது அவருக்கும் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். 

இதைபார்த்த உறவினர்கள் தங்கம்மாளை, உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர், ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். அண்ணன் இறந்த உடனே, தங்கையும் அவரது மடியில் உயிரை விட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

woman died after brother death in madurai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->