கோவை : பட்டபகலில் வீட்டில் இருந்த பெண் கழுத்தறுத்து கொலை - திட்டமிட்ட சதியா? - Seithipunal
Seithipunal


கோவை மாவட்டத்தில் அன்னூர் அருகே புதூர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் மனைவி தங்கமணி. இவர் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் பைனாஸ் செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் சுப்பிரமணி நேற்று மதியம் வெளியே சென்றுள்ளார். அதனால், வீட்டில் தங்கமணி மட்டும் தனியாக இருந்துள்ளார். இதையடுத்து வெளியே சென்ற சுப்பிரமணி வீட்டிற்கு வந்து பார்த்த போது தங்கமணி கழுத்தறுக்கப்பட்டு ரத்தம் ஓடிய படி கிடந்துள்ளார்.

இதனால், அதிர்ச்சியடைந்த சுப்பிரமணி சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். அதன் படி, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தங்கமணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதன் பின்னர் போலீசார் சம்பவம் குறித்து தங்க மணியின் குடும்பத்தார், உறவினர்கள் மற்றும் அருகில் வசிப்பவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும், தடயவியல் நிபுணர்களும் மோப்பநாயுடன் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டனர். 

இதைத் தொடர்ந்து, போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப்பகலில் பெண் ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

woman kill in coimbatore police investigation


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->