இருக்குற இந்த ரெண்டு வருஷத்துல என்னாத்த புடுங்க போறாரு - இளம்பெண்ணின் வைரலாகும் வீடியோ.!
woman released vedio against pen statue
இருக்குற இந்த ரெண்டு வருஷத்துல என்னாத்த புடுங்க போறாரு - இளம்பெண்ணின் வைரலாகும் வீடியோ.!
தமிழக அரசு சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதிக்காக பேனா சிலை அமைக்க உள்ளது. இதற்கான பணிகள் ஒருபுறம் நடந்துகொண்டிருக்கும் நிலையில், அரசியல் வட்டாரத்தில் எதிர்ப்புகளும் கண்டனங்களும், வந்து குவிந்த வண்ணம் உள்ளன.
அந்த வகையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் "பேனா சிலை வைத்தால் அதை உடைப்பேன்" என்று ஆவேசப்பட்டு கூறி வருகிறார்.
இதேபோல், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் "கடலில் பேனா சிலை வைத்தால் இது மெரினா கடல் என்ற பெயர் போயி பேனா கடல் என்ற பெயர் வந்துவிடும்" என்று கிண்டல் செய்து பேசியுள்ளார்.
இந்த நிலையில், கடலில் பேனா சிலை அமைப்பது குறித்து இளம்பெண் ஒருவர் பேசிய வீடியோ வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை அதிமுக தகவல் தொழில் நுட்ப அணி நிர்வாகி சிடிஆர் நிர்மல் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், ‘’எதுக்கு இந்த தேவையில்லாத பிரச்சனை. மெரினாவில் பேனா சிலை வைக்கிறது இப்ப அவசியமா? யாரு கேட்டா இந்த பேனா சிலை? அவங்க அப்பாவுக்காக சிலை வைக்கும் அவர் இந்த மக்களுக்காக என்ன வைத்தார்? ஒன்றுமே இல்லையே.. குடும்பத் தலைவிக்கு ஆயிரம் ரூபாய் போடுகிறேன் என்று இதுவரைக்கும் போட காணோம்.
அவர் ஆட்சிக்கு வந்து ரெண்டு வருஷம் போயிட்டு. மூணு வருஷத்துல மூணாவது வருஷமும் போயிடும். இருக்குற இந்த ரெண்டு வருஷத்துல என்னாத்த புடுங்க போறாரு’’ என்று தனது கருத்தையும் கவலையையும் வெளிப்படுத்தியுள்ளார்.
English Summary
woman released vedio against pen statue