பாலியல் ரீதியாக தொல்லை - சக பேராசிரியர் மீது புகார் அளித்த மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக பேராசிரியை.!!
women petition against co professor for harassment in tirunelveli
திருநெல்வேலி மாநகர பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த 2021-ம் ஆண்டு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.
இந்த நிலையில் அங்குள்ள பேராசிரியர் ஒருவர் அந்த மாணவி பட்டம் பெறுவதற்கு தாமதம் ஏற்படுத்தி பல்வேறு இடையூறுகளை கொடுத்துள்ளார். இதனால், விரக்தியடைந்த அந்த இளம் பெண் உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்து முனைவர் பட்டத்தை பெற்றுள்ளார்.

இதனால், சம்பந்தப்பட்ட துறை பேராசிரியர் சம்பந்தப்பட்ட மாணவியை எந்த கல்லூரியிலும் பணியாற்ற விடாமல் இடையூறு ஏற்படுத்தி வந்துள்ளார். இந்த நிலையில், தற்போது மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தற்காலிக பேராசிரியராக பணியாற்றி வரும் இந்த பெண்ணுக்கு சில மாணவர்களை வைத்து பொய் புகார் கொடுத்து தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தி வந்துள்ளார்.
இதையறிந்த அந்த இளம்பெண் முனைவர் பட்டம் பெரும் காலத்தில் இருந்து பாலியல் ரீதியான ஆசைக்கு ஒத்துழைக்காத காரணத்தால் நீண்ட ஆண்டுகளாக தன்னுடன் மோதல் போக்கில் ஈடுபட்டு வருகிறார் என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பேராசிரியர் மாநில பெண்கள் ஆணையத்திற்கும், உயர்கல்வித்துறைக்கும் புகார் மனு அளித்துள்ளார்.
இதையடுத்து மாநில உயர்கல்வித்துறை விசாரணை நடத்த மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிட்டுள்ளது. இதேபோல் மாநில பெண்கள் ஆணையமும் நேரில் வந்து பல்கலைக்கழகத்தில் விசாரணை நடத்த உள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
English Summary
women petition against co professor for harassment in tirunelveli