சேலம் || பெரியாரின் கனவை நனவாக்கிய பெண்கள் - இறுதி சடங்கு செய்த சம்பவம்.! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்தில் உள்ள கொளத்தூர் அருகே அமைந்துள்ள உக்கம்பருத்தி காடு கிராமத்தில் ஏராளமானவர்கள் பெரியாரின் கொள்கைகளை பின்பற்றுபவர்களாக இருந்து வருகின்றனர். இதனால், தங்களது குடும்ப நிகழ்வுகளில் சடங்கு, சம்பிரதாயங்களை தவிர்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் இதே கிராமத்தைச் சேர்ந்த செல்லமுத்து என்பவர் வயது மூப்பு காரணமாக இன்று உயிரிழந்தார். இவரது உடல் வழக்கமாக நடைபெறும் இறுதிச் சடங்குகளை தவிர்த்து தகனம் செய்யப்பட்டது. பொதுவாக இறுதி ஊர்வலங்களில் ஆண்களே முன் நின்று நடத்துவதோடு, பெண்களை சுடுகாடு வரை அனுமதிக்காமல் இருந்து வந்தனர்.

ஆனால், இதற்கு மாறாக செல்லமுத்துவின் இறுதி ஊர்வலத்தை அதே கிராமத்தைச் சேர்ந்த பெண்களே தலைமை ஏற்று நடத்தினர். இறந்தவரின் உடலை பெண்களே சுமந்து செல்ல, ஆண்கள் அவர்களுக்கு பின்னால் அணிவகுத்து சென்றனர். உடல் தகனம் செய்யும் இடத்தில் உள்ள நடமாடும் தகனமேடை மூலம் செல்லமுத்துவின் உடல் தகனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பின்னர் இறுதி வணக்கம் செலுத்தப்பட்டு தகன மேடையில் வைத்து செல்லமுத்துவின் உடல் தகனம் செய்யப்பட்டது.

இது தொடர்பாக அப்பகுதி மக்கள் தெரிவித்ததாவது, "எந்த நிகழ்விலும் ஆண், பெண் என்ற பாலின பேதம் பார்க்கக்கூடாது என்பது பெரியாரின் கொள்கையாகும். பெண்களும் இறுதி நிகழ்வில் பங்கேற்கலாம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த நிகழ்வு நடத்தப்பட்டதாக கிராமத்தினர் தெரிவித்துள்ளனர். குறிப்பாக பெண்களை ஊர்வலத்திற்கு தலைமை ஏற்க வைத்து, ஆண்கள் பின்னால் சென்றதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

womens funeral function in salem


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->