ஓடும் ரயிலில் ஏற முயன்ற தொழிலாளிக்கு நேர்ந்த விபரீதம்! தொடர் விசாரணையில் போலீசார்!
worker trying board the train happened Tragedy
அம்பாசமுத்திரம் ஹோட்டல் தொழிலாளி ஒருவன் ஆழ்வார்குறிச்சி ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்து உயிரிழந்தார்.
தென்காசி, ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள அழகப்பபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராமையா. இவரது மகன் ராஜீவ் காந்தி (வயது 37) இவர் திருநெல்வேலியில் உள்ள தனியார் உணவகத்தில் பணியாற்றி வந்தார்.
இவரது மனைவி மாரி செல்வி. இவர்களுக்கு மூன்று வயதில் ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் இன்று காலை செங்கோட்டையில் இருந்து திருநெல்வேலிக்கு சென்ற ரயிலில் ஆழ்வார்குறிச்சி ரயில் நிலையத்தில் இவர் ஏற முயன்றுள்ளார்.
அப்போது ராஜீவ் காந்தி நிலை தடுமாறி தண்டவாளத்தில் தவறி விழுந்து ரயிலில் அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து அருகில் இருந்தவர்கள் தென்காசி ரயில்வே போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்த ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜீவ் காந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக ஆழ்வார்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
worker trying board the train happened Tragedy