39 வயது பெண்ணுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண் - சேலத்தில் பரபரப்பு.!! - Seithipunal
Seithipunal


39 வயது பெண்ணுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண் - சேலத்தில் பரபரப்பு.!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கொண்டலாம்பட்டி அருகே அரச மரத்து கரட்டூரை சேர்ந்தவர்கள் தாமோதரன்-கௌசல்யா தம்பதியினர். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கவுசல்யா அதே ஊரைச் சேர்ந்த சேகர் என்பவரின் மனைவி மணிமேகலா என்பவருடன் நேற்று முன்தினம் மாயமாகிவிட்டார்.

இவர் வீட்டை விட்டு செல்வதற்கு முன்பாக கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு சென்றுள்ளார். அந்தக் கடிதத்தில், "கணவரோடு வாழ விருப்பம் இல்லை என்று எழுதி வைத்துவிட்டு தாலி கயிறை கழட்டி கடிதத்துடன் கட்டில் மீது வைத்துவிட்டு சென்றுள்ளார். 

குழந்தைகளை கூட நினைத்துப்பார்க்காமல் கௌசல்யா மாயமாகியது அதிர்ச்சி தகவலாக உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கவுசல்யாவின் கணவர் போலீசில்  தனது மனைவி கடிதம் எழுதி வைத்துவிட்டு இன்னொரு பெண்ணுடன் மாயமாகிவிட்டதாக புகார் தெரிவித்தார். 

அதன் படி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி கௌசல்யாவை தேடி வருகின்றனர். இளம்பெண் ஒருவர் 39 வயது பெண்ணுடன் ஓட்டம் பிடித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

young girl ranning with woman in salem


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->