கோவை : வீடு புகுந்து 8ஆம் வகுப்பு மாணவி பலாத்காரம் - போக்சோவில் வாலிபர் கைது - Seithipunal
Seithipunal


கோவை மாவட்டத்தில் வீடு புகுந்து 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் கோவில்பாளையம் அருகே உள்ள கரட்டுமேடு பகுதியை சேர்ந்தவர் 13 வயதுடைய எட்டாம் வகுப்பு மாணவி. இவரது தாய் இறந்து விட்டதால் தந்தையுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் மாணவிக்கும், அதே பகுதியில் நண்பர்களுடன் தங்கி வேலை பார்த்து வந்த வெள்ளிமலை பட்டினத்தை சேர்ந்த மதன்குமார்(20) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனால் மதன்குமார் அடிக்கடி மாணவியின் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் மாணவி தனியாக இருந்தபோது வந்த மதன் குமார், மாணவியை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் இதுகுறித்து வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளார்.

இருப்பினும் மாணவி இதுகுறித்து தனது அத்தையிடம் தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் அத்தை, உடனடியாக இந்த சம்பவம் குறித்து கோவில்பாளையம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், எட்டாம் வகுப்பு மாணவியை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்த மதன்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Youth arrested for raping 8th class girl in kovai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->