15 அடி வெள்ளத்தில்..3 நாட்களுக்கு பின் சடலமாக மீட்கப்பட்ட மகன்.!! கதறும் பெற்றோர்கள்.!! - Seithipunal
Seithipunal


மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில் 4வது நாளாக மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சென்னை அடுத்த பள்ளிக்கரணையில் 15 அடி வெள்ளத்தில் சிக்கிய தாய், தந்தை மற்றும் தங்கையை காப்பாற்றிய இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அருண் என்ற இளைஞர் 3 நாட்களுக்கு முன்பு தனது குடும்பத்தினர் வெள்ளத்தில் சிக்கியதை கண்டு மீட்கச் சென்ற நிலையில் அவர் திடீரென மாயமானார். காணாமல் போன தனது மகனை கண்டுபிடித்து தர வேண்டுமென அரசு அதிகாரிகளுக்கும் காவல்துறையினருக்கும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனால் காவல்துறையினர் அருணின் பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறிவிட்டுச் சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் 3 நாட்களுக்குப் பின் இன்று காலை மூட்டை போல மிதந்து வந்த பொருளைக் கண்ட அப்பகுதி மக்கள் அருகில் சென்று பார்த்த போது காணாமல் போன அருணின் சடலம் என்பது தெரிய வந்தது.

இதனை அடுத்து அருணின் உறவினர்கள் காவல்துறையின் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினருக்கு தகவல் அளித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து அருணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் சென்றுள்ளனர். பெற்றோர்களை காப்பாற்ற சென்ற மகன் சடலமா மீட்கப்பட்டுள்ள சம்பவம் பள்ளிக்கரணை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Youth died who saved his parents in Chennai floods


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->