விருதுநகர்.! குளிப்பதற்காக மேல் பகுதியில் இருந்து குதித்த போது பாறையில் மோதி இளைஞர் பலி.! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டத்தில் குளிப்பதற்காக மேல் பகுதியில் இருந்து குதித்த போது பாறையில் மோதி இளைஞர் உயிரிழந்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர் கார்த்திகைமணி. இவர் சிவகாசி கிழக்கு காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக வேலை பார்த்து வருகிறார்.

இவரது மகன் முருகப்பன்(19). இவர் சாப்டூர் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக நண்பர்களுடன் சென்றுள்ளார்.

அப்பொழுது அங்குள்ள வழுக்குப் பாறை அருகே உள்ள தண்ணீர் கிடக்கில் குழிப்பதற்காக மேற்பகுதியில் இருந்து குதித்த போது பாறையில் மோதி காயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Youth dies after hitting a rock in virudhunagar


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->