பரபரப்பு - திருத்தணி அருகே வாலிபர் வெட்டிக் கொலை.!
youth murder in thiruthani
திருத்தணி அருகே பத்தொன்பது வயது இளைஞர் ஒருவர் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி அருகே நார்த்தவாடா பகுதியைச் சேர்ந்தவர் லோகேஷ் என்ற இளைஞர். இவரை மர்ம கும்பல் ஒன்று சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பித்து ஓடியது.

இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் அளித்தனர். அதன் படி அவர்கள் விரைந்து வந்து வாலிபரை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
youth murder in thiruthani