பாய்ந்த குண்டர் சட்டம்... அரசுக்கு கேள்வி எழுப்பிய நீதிமன்றம்! சவுக்கு சங்கருக்கு இடைக்கால ஜாமின்.! - Seithipunal
Seithipunal



பிரபல யூடியூபரான சவுக்கு சங்கரை தமிழக போலீசார் பல்வேறு வழக்குகளில் கைது செய்து சிறையில் அடைத்த நிலையில் அவர் மீது குண்டார் சட்டம் போடப்பட்டுள்ளது. குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து சவுக்கு சங்கர் தாய் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். 

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, சவுக்கு சங்கரால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளதா பொது அமைதிக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படுகிறதா என உச்சநீதிமன்றம், அரசு நோக்கி கேள்வி எழுப்பியது. 

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடர்பாக பல்வேறு முறைகேடான தகவல்களை பதிவிட்டது உள்பட பல்வேறு காரணங்களால் சவுக்கு சங்கர் மீது குண்டார் சட்டம் போடப்பட்டதாக தெரிவித்தார். 

அரசு தரப்பு குற்றச்சாட்டை மறுத்த சவுக்கு சங்கர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கிய அதே நீதிபதி குண்டர் சட்டத்தில் கைது செய்தது தவறு என தீர்ப்பு வழங்கியுள்ளார் என்று வாதாடினார். 

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சென்னை உயர் நீதிமன்றம், இந்த வழக்கை உயர்நீதிமன்றம் விசாரிக்க தொடங்கி விட்டதால் விரைந்து விசாரணை முடிக்க வேண்டும் எனவும் சவுக்கு சங்கருக்கு இடைக்கால ஜாமின் வழங்கியும் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் ஆட்கொணர்வு மனுவை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரிய மனுவை திரும்ப பெற அனுமதி அளித்த மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Youtuber Savukku Shankar interim release


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->