சொமாட்டோ இனி "ஈடர்னல்" - அதிரடி பெயர் மாற்றம்!
ZOMATO now Eternal
ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்தால் வீட்டுக்கே உணவு விநியோகம் செய்யும் சேவையில் ஈடுபட்டுவரும் சொமாட்டோ நிறுவனம், தனது பெயரை மாற்றியுள்ளது.
அதன் நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து அதிகாரப்பூர்வமாக சொமாட்டோ இனி ஈடர்னல் (Eternal) என்ற பெயருக்கு மாற்றப்பட்டுள்ளது.
சொமாட்டோ, பிளிங்கிட், டிஸ்ட்ரிக் (லைஃப் ஸ்டைல் செயலி), ஹைபர்பியூர் ஆகிய சொமோட்டோவின் (ஈடர்னல்) நிறுவன சேவைகளை உள்ளடக்கியதாக ஈடர்னல் நிறுவனம் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பெயர் மாற்றம் ஈடர்னல் நிறுவனத்தின் அனைத்து சேவைகளையும் உள்ளடக்கிய ஒரு குடையின் கீழ் கொண்டு வரும் முயற்சி என்றும் அது விளக்கம் அளித்துள்ளது.