சென்னை வாசிகளே இதை கவனித்தீர்களா? கூகுள் மேப் புதிய ஸ்டிரீட் வியூ.! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் தற்போது கூகுள் மேப் செயலியில் உள்ள ஸ்டிரீட் வியூ பயன்பாட்டுக்கு வந்துள்ளது. பாதுகாப்பு காரணமாக பயன்பாட்டிற்கு வராமலிருந்த ஸ்டிரீட் வியூ தற்போது முதற்கட்டமாக இந்தியாவின் 10 முக்கிய நகரங்களுக்கு மட்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

ஸ்டிரீட் வியூ மூலம் இருப்பிடத்தின் புகைப்படங்களை 360 டிகிரியில் தெளிவாக காண முடியும். வெளிநாடுகளில் இது பல ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது இரு தனியார் நிறுவனங்களின் உதவியுடன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் முதற்கட்டமாக இந்த ஸ்டிரீட் வியூ சென்னை, டெல்லி, மும்பை, பெங்களூரு, ஐதராபாத், புனே, நாசிக், அமிர்தசரஸ், வதோதரா, அகமத்நகர் ஆகிய 10 நகரங்களில் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. 

இதன் மூலம் உள்ளூர் சாலை அமைப்புகள் மற்றும் போக்குவரத்து தடங்கள் உள்ளிட்டவற்றை அறிந்துகொள்ள முடியும். சுமார் 1.5 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தை இந்த ஸ்டிரீட் வியூ மூலம் புகைப்படங்களாக பார்க்க முடியும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Google Maps New Street View


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->