இந்தியாவில் மீண்டும் அடியெடுத்து வைக்கும் சிட்ரோன் நிறுவனம்.! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் பல முன்னணி நிறுவனங்களும் எலெக்ட்ரானிக் கார் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், தற்போது என்ட்ரி லெவல், மிட் ரேஞ்ச், பிரீமியம் என்று மொத்தம் மூன்று செக்மெண்டில் கார்கள் விற்பனை செய்யபடுகின்றது.

இந்த நிலையில், பிரான்ஸ் நாட்டின் சிட்ரோன் என்ற நிறுவனம் தனது முதல் எலக்ட்ரிக் காரான eC3 என்ற எலக்ட்ரிக் எஸ்யூவி காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த காரின் ஷோரூம் விலையானது 11,50,000 லட்சம் ரூபாய் என்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த கார்  இந்தியாவில் சென்னை மற்றும் கோயம்புத்தூர் உள்பட 25 முக்கிய நகரங்களில் கிடைக்கிறது.

தமிழ்நாட்டில் உள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் தயாரிக்கப்பட்டு வரும் இந்த கார் வரும் மார்ச் மாதத்திலிருந்து டெலிவரி ஆக உள்ளது. இந்த காரை Maison La ஷோரூம் மற்றும் இணையதளம் மூலம் வாங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் முழு விவரம் பின்வருமாறு:-

காரின் சிறப்பம்சங்கள் :-

* இந்த கார் Live, Feel, Feel Vibe Pack, Feel Dual tone Vibe Pack என்று மொத்தம் நான்கு வேரியண்ட்களில் உள்ளது.
* இந்த கார் விற்பனையாகும் ஷோரூம்களில் DC பாஸ்ட் சார்ஜ்ர் வசதி கொடுக்கப்படும் 
* 29.2 KWH பேட்டரி கொண்ட இந்த காரில் 320 கிமீ வரை செல்ல முடியும்.
* இது அதிக பவர் கொண்ட 143NM டார்க்விசையை வெளிப்படுத்தும்.
* இதில் Vehicle Tracking, Emergency Services, Driving Behaviour analysis, OTA அப்டேட் வசதி, ஏழு வருட சேவை, இன்சூரன்ஸ் உள்ளிட்டவை உள்ளன.
* மேலும், My Citroen Connect , C Buddy ஆப், Android, IOS போன்ற வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளான.

காரின் ஷோரூம் விலை பட்டியல் :-

Live வேரியண்ட் - 11,50,000 லட்சம் ரூபாய்
Feel வேரியண்ட் - 12,13,000 லட்சம் ரூபாய்
Feel Vibe Pack வேரியண்ட் - 12,28,000 லட்சம் ரூபாய்
Feel Dual Tone Vibe Pack வேரியண்ட் - 12,42,000 லட்சம் ரூபாய்
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

citron company launched eC3 car in india


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->