விலை குறைந்த ''Oneplus'' ஸ்மார்ட்போன்: எந்த மாடல் தெரியுமா?
Oneplus 11 price cut
ஒன் பிளஸ் நிறுவனத்தின் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஒன் பிளஸ் 11 கடந்த ஆண்டு அறிமுகமான. தற்போது இந்த ஸ்மார்ட்போன் விலை ரூ. 5000 குறைத்து அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் அறிமுகமானதிலிருந்து ஒன் பிளஸ் 11 விலை இரண்டு முறை குறைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்திய சந்தையில் Oneplus 11 ஸ்மார்ட் போன் ரூ. 50,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த ஸ்மார்ட்போனின் விலை தற்போது ரூ. 49,999 ஆக விலை குறைக்கப்பட்டுள்ளது. இதில் ரூ. 3 ஆயிரம் விலை குறைப்பு மற்றும் ரூ. 2000 தள்ளுபடி என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனை அதிகாரப்பூர்வ வலைதளம் அல்லது அமேசானில் வாங்கும் பொழுது சலுகை அல்லது இதர வங்கி சார்ந்த சலுகைகளை பெற முடியும்.