திமுகவினார் கொன்றது உண்மை.. இதோ ஆதாரம்.. எகிறி அடிக்கும் அண்ணாமலை.!!
Annamalai released video Cuddalore gomathi murder case
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் கோமதி என்ற பெண் பாஜகவுக்கு வாக்களித்ததால் கொலை செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலானது. இந்த சம்பவம் குறித்து கடலூர் போலீசார் நடத்திய விசாரணையில் கோமதி கொல்லப்பட்ட வழக்கில் சமூக வலைதளத்தில் போலியாக தகவல் பரப்பிய புகாரின் பேரில் மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தனர்.
மேலும் கோமதி முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டதாகவும் போலீஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது. இதநிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது கடலூர் மாவட்ட போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். வன்முறையை தூண்டுதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் தமிழக பாஜக தலைவரும் கோவை தொகுதி பாஜக வேட்பாளருமான அண்ணாமலை மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பதிவில் "திமுக குண்டலால் கோமதி கொல்லப்பட்டது பற்றிய உண்மையை அம்பலப்படுத்தியதற்காக பாசிச திமுக அரசு எனது பெயரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது என்பதை நான் புரிந்து கொள்கிறேன்.
கோமதியின் கணவர் மற்றும் உறவினர்கள் இது ஏதோ முன்விரோதம் இல்லை என்றும் உண்மையான காரணம் அவர் பாஜகவுக்கு வாக்களித்ததே என்றும் இதனால் தான் கோமதி திமுக குண்டர்களால் தாக்கப்பட்டார் என்றும் உறுதிப்படுத்தி உள்ளனர்.
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கொடுத்த வழக்குகள் உட்பட பல அற்ப வழக்குகளை போட்டு பாசிச திமுகவினர் எங்கள் குரலை அடக்க முடியாது. மக்களின் குரலாக இருப்பதற்காகவும் உண்மையை அம்பலப்படுத்தியதற்காகவும் எங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
திரு மு க ஸ்டாலின் அவர்களே உங்களை வெளியேற்றும் நாள் வெகு விரைவில் இல்லை. எத்தனை வழக்குகளை வேண்டுமானாலும் தாக்கல் எத்தனை வழக்குகளை வேண்டுமானாலும் போடுங்கள், நாங்கள் சமரசம் செய்து கொள்ள மாட்டோம்" என பதிவிட்டு கோமதியின் உறவினர்கள் மற்றும் கணவர் பேசிய வீடியோவை பதிவிட்டுள்ளார் அண்ணாமலை.
English Summary
Annamalai released video Cuddalore gomathi murder case