தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கொட்டித் தீர்க்க போகும் மழை.!!
17 feb weather report in tamilnadu
கேரளா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியின் மேல் நிலவும் கீழ் அடுக்கு சுழற்சியின் காரணமாக, தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்கள் மற்றும் தென்காசி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.
நாளை தென் தமிழக கடலோர மாவட்டங்கள் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் பகுதியில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
English Summary
17 feb weather report in tamilnadu