புயலை துல்லியமாக கண்டறிய புதிய 2 ரேடார்கள்...!!! பேரிடர் மேலாண்மைத் துறை கூறுவது என்ன?
2 new radars accurately detect storms Disaster Management Department
தமிழ்நாட்டில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை,வானிலை முன்னெச்சரிக்கை மற்றும் புயல் கண்காணிப்பிற்கு புதிய ரேடார்கள் நிறுவப்படவுள்ளதாக கொள்கை விளக்கக்குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதில் வானிலை முன்னெச்சரிக்கை துல்லியத்தை மேம்படுத்த ஏற்காடு, ராமநாதபுரத்தில் டாப்ளர் ரேடார்கள் நிறுவப்படும்.

இது ரூ.56 கோடி மதிப்பில் சி பேண்டு டாப்ளர் ரேடார்கள் நிறுவப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் தமிழ்நாட்டில் ராமநாதபுரம், ஏற்காடு ஆகிய 2 இடங்களில் புதிதாக அதிநவீன ரேடார்கள் நிறுவினால் தமிழகத்தின் தென்பகுதி மற்றும் வடமேற்கு பகுதிகளை இயற்கை சீற்றத்திலிருந்து முழுமையாக தடுக்கவும் மற்றும் மக்களை காப்பாற்றவும் முடியும் .
கேரள மாநிலம் கொச்சி மற்றும் திருவனந்தபுரத்தில் நிறுவப்பட்டுள்ள ரேடார்கள் மூலம் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் நிலவும் பருவ நிலைகள் ஓரளவுக்கு கண்காணிக்கப்படுகிறது.
ஆனாலும் பல பகுதிகளை இதன் மூலம் கண்காணிப்பதில் சிக்கல்கள் இருந்து தான் வருகிறது. இதனை சரிசெய்யும் வகையிலும், தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் நிலவும் பருவநிலைகளை முன்கூட்டியே கண்காணிக்க வசதியாகவும் 2 புதிய ரேடார்கள் நிறுவப்படுகின்றன.
இதன் மூலம் தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பருவ நிலைகளை முன்னதாகவே கண்டறிந்து இயற்கை சீற்றங்களிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க தேவையான முன்னேற்பாடுகளை செய்ய முடியும் என வானிலை ஆய்வு மைய்ய அதிகாரிகளால் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
English Summary
2 new radars accurately detect storms Disaster Management Department