இனி வருடத்திற்கு 8 மாதம் வெயில்! அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! - Seithipunal
Seithipunal


வருடத்திற்கு 8 மாதங்கள் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படும் என அண்ணா பல்கலைக்கழகத்தின் காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை மையம் நடத்திய ஆய்வில் தகவல்.

உலகம் முழுவதும் காலநிலை மாற்றத்தின் காரணமாக பல்வேறு நாடுகளில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டு வருகிறது. வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக பல்வேறு நாடுகளில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு வறட்சி நிலவி வருகிறது. 

அண்ணா பல்கலைக்கழகத்தின் காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை மையத்தில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளின் படி, தொடர் நகரமயமாக்கல் காரணமாக தமிழ்நாடு உட்பட இந்தியாவில் உள்ள 21 நகரங்களில் அடுத்த 25 ஆண்டுகளுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படும்.

வெயில் காலத்தில் உள்ளதை விட இரண்டு மடங்கு வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வெப்ப அலை வீசும். வருடத்திற்கு 8 மாதத்திற்கும் வெப்ப அலை வீசும் என்ன கூறப்படுகிறது. வெப்பநிலை அதிகரித்து வெப்பஅலை தமிழகத்தில் பாதிப்புகளை ஏற்படும் என கூறப்படுகிறது.

வெப்பத்தை தொடர்ந்து மழையும், கடலோர மாவட்டங்களில் இயல்புக்கு மாறாக குறுகிய காலத்தில் அதிக மழை கொட்டி தீர்த்து உள்ளது. 2050-ல் சராசரி மழைப்பொழிவு 4 சதவீதமும் 2080 இல் 11 சதவீதமும் 2100ல் 16 சதவீதமும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

8 months a year Information published by Anna University


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->