வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி!...இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! - Seithipunal
Seithipunal


வங்கக்கடலில் வரும் 14-ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில், தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் தற்போது வளிமண்டல சுழற்சி நிலவுவதாகவும், இந்த வளிமண்டல சுழற்சி தீவிரமடைந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, வங்கக்கடலில் வரும் 14-ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக , வடகிழக்குப் பருவமழையின் போது தமிழ்நாடு, கேரளா மற்றும் ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட தென் தீபகற்பப் பகுதிகளில் இயல்பை விட அதிகமாக மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில்,  வரும் 16-ம் தேதி வரை தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் ஏற்கெனவே தெரிவித்துள்ளது. முக்கியமாக  வரும் 15-ம் தேதி தமிழகத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A low pressure area is forming in the bay of bengal india meteorological department warning


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->