தமிழ்நாட்டில் 21 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு.!!
Chance to heavy to very heavy rain in 21 districts in Tamil Nadu
நேற்று மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதியில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி அதே பகுதியில் நீடிப்பதாலும், குமரி கடல் ஒட்டிய பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாலும், கிழக்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாகவும் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னல் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
அதே வேளையில் இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சூறைக்காற்று மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
English Summary
Chance to heavy to very heavy rain in 21 districts in Tamil Nadu