தமிழகத்தில் அடுத்த 2 தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை - எச்சரிக்கை விடுத்த சென்னை வானிலை ஆய்வு மையம்!
Chennai IMD Report Tamilnadu Weather report 15 09 2024
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று முதல் வரும் 21 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், தமிழகத்தில் அடுத்த 2 தினங்களுக்கு (15.09.2024 மற்றும் 16.09.2024) அதிகபட்ச வெப்பநிலை | ஓரிரு இடங்களில் 2°-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-388 செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்திற்கான வானிலை தொகுப்பு:
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. புதுவையில் வறண்ட வானிலை நிலவியது.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): காரைக்குடி (சிவகங்கை) 3; ஜெயம்கொண்டம் (அரியலூர்), சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்), நடுவட்டம் (நீலகிரி), செந்துரை ARG (அரியலூர்), சோலையார் (கோயம்புத்தூர்), தேவகோட்டை (சிவகங்கை) தலா 1 சென்டிமீட்டர் அளவு மழை பொழிந்தது.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான வெப்பநிலை (சமவெளிப்பகுதிகள்): அதிகபட்ச வெப்பநிலை :- மதுரை : 40.6 ° செல்சியஸ் குறைந்தபட்ச வெப்பநிலை :- ஈரோடு: 19.0 செல்சியஸ்
English Summary
Chennai IMD Report Tamilnadu Weather report 15 09 2024