தமிழக பள்ளி மாணவ- மாணவியர்களுக்கு சூப்பர் செய்தி - அதிரடியாக வெளியான அரசாணை.!
EServiceCenter DPI Certificates
தமிழக பள்ளிக் கல்வித்துறையின் 23 வகையான சான்றிதழ்களை இனி இ-சேவை மையம் மூலமாக பெற்றுகொள்ளலாம் என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வித்துறையின் 23 வகையான சான்றிதழ்களை இ-சேவை மையம் மூலமாக பெற்றுக்கொள்வதற்கு, சட்டப்பேரவையில் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பை அமல்படுத்தும் வகையில் பள்ளிக் கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
மதிப்பெண் சான்றிதழ், இணைக் கல்வி சான்றிதழ் உள்ளிட்ட 23 வகையான சான்றிதழ்களை இனி இ-சேவை மூலம் விண்ணபித்து பெறலாம் என்று பள்ளிக் கல்வித்துறை அந்த அரசாணையில் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, உயர்கல்வி, வேலை வாய்ப்புகள் குறித்து 9-ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள் வழங்குவதற்காக ஆலோசனை மையம் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
மேலும் ஒரு செய்தியாக 8ம் வகுப்பு தனித்தேர்வு எழுதியவர்களுக்கு பிப்ரவரி 1ம் தேதி முடிவுகள் வெளியிடப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
English Summary
EServiceCenter DPI Certificates