சுட்டெரிக்க போகும் வெயில் - வானிலை ஆய்வு மையம் தகவல்.!
heat increase in tamilnadu
தமிழகத்தில் அதிலும் குறிப்பாக தென்தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக ஓரிரு நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால், கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, ராமேசுவரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
அந்த வகயைில், நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவுபெற்ற 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோழிப்போர்விளையில் 15 செ.மீட்டர் கனமழை பதிவாகியுள்ளது. தென்காசி மாவட்டம் கடனா அணையில் 13 செ.மீட்டர், கன்னியாகுமரி மாவட்டம் ஊத்து பகுதியில் 11 செ.மீட்டர், நெல்லை மாவட்டம் நாலுமுக்கு பகுதியில் 10 செ.மீட்டர் கனமழை கொட்டித் தீர்த்துள்ளது.

இந்த நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த ஒரு வாரத்திற்கு, பொதுவாக வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பநிலையை பொறுத்தவரையில், நேற்று திருப்பத்தூர் மாவட்டத்தில் வெயில் சதம் கண்டது.
அதாவது 101.84 டிகிரி வெப்பம் சுட்டெரித்துள்ளது. அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தில் அதிகபட்சமாக வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2 முதல் மூன்று டிகிரி வரை அதிகம் இருக்க கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
English Summary
heat increase in tamilnadu