தமிழ்நாட்டின் 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும்!! - Seithipunal
Seithipunal


வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதியில் நிகழும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

அதே போன்று தமிழ்நாட்டில் வரும் நவம்பர் 8ம் தேதி வரை பெரும்பாலான மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகரை பொருத்தவரை அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

கேரளா, தெற்கு கர்நாடகா மற்றும் லட்சத்தீவு பகுதியை ஒட்டிய அரபிக் கடல் பகுதியில் சூறைக்காற்று மணிக்கு 55 கிலோ மீட்டர் வரை வீச கூடும் என்பதால் மீனவர்கள் வரும் நவம்பர் 9ம் தேதி வரை அரபிக் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழையானது தற்போது வரை 27 சதவீதம் குறைவாக பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Heavy rain in 10 districts in Tamil Nadu


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->