மக்களே கனமழைக்கு தயாரா.! தென் மாநிலங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.!! - Seithipunal
Seithipunal


தென்னிந்திய பகுதிகள் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் வடகிழக்கு பருவமழை நவம்பர் மாதத்தில் இயல்பாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது வழக்கமாக அக்டோபர் மாதம் 20ஆம் தேதி தொடங்கும் வடகிழக்கு பருவமழை டிசம்பர் மாதம் இறுதி வரை நீடிக்கும்.

இந்த பருவமழையானது நவம்பர் மாதத்தில் சென்னை, புதுச்சேரி, கடலோர ஆந்திர பிரதேசம், கேரளா மற்றும் தெற்கு கர்நாடகாவில் சராசரியாக 118.69 மி.மீ மழை பதிவாகும். அந்த வகையில் நவம்பர் மாதத்திலும் சராசரி அளவு மழை பதிவாகும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, காரைக்காலில் கன முதல் மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் நாளை கன முதல் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கேரளா, பாண்டிச்சேரி, காரைக்கால், தெற்கு ஆந்திரா, கர்நாடகா மாவட்ட பகுதிகளிலும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Heavy rain Orange alert for 3 states tomorrow


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->