சென்னை மக்களே தயாரா? இன்னும் 3 நாட்கள் தான்!! இதோ வருகிறது வடகிழக்கு பருவமழை!!
Imd announced northeast monsoon will begin in 3 days
இந்தியாவில் தென்மேற்கு பருவமழை இன்றுடன் முடிவடைவதாக தென்மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள வானிலை ஆய்வு மையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது "தற்போது கிழக்கு மற்றும் வடகிழக்கு திசையில் இருந்து தென்னிந்திய பகுதிகளில் காற்று வீசுவதால் அடுத்த மூன்று நாட்களில் வடகிழக்கு பருவமழை தென்னிந்திய பகுதிகளில் தொடங்க கூடும்.
தற்போது லட்சத்தீவை ஒட்டிய அரபிக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலைக்கொண்டுள்ள சூழலில் வங்க கடலில் மற்றொரு காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 28ஆம் தேதியை ஒட்டி உருவாக கூடும். இந்த இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக வடகிழக்க பருவமழை துவக்க நிலையில் வலுவிழந்து காணப்படும்.
அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னை பொருத்தவரை நகரின் ஒரு சில பகுதியில் மேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. தென் மேற்கு பருவ மழை வழக்கத்தை விட 8% அதிகமாக பெய்துள்ளது. சென்னையில் தென்மேற்கு பருவமழை இயல்பை விட 74% அதிகமாக பெய்துள்ளது" என தெரிவித்துள்ளார்.
English Summary
Imd announced northeast monsoon will begin in 3 days