அடுத்த ஒரு வாரத்திற்கு கனமழை முதல் அதிகனமழை பெய்யும்! புயல் சின்னம் - இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கை! - Seithipunal
Seithipunal


அடுத்த ஒரு வாரத்திற்கு மும்பையில் கனமழை முதல் அதிகன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய மாநில ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்த அந்த அறிவிப்பில், மகாராஷ்டிரா மாநிலத்தின் வட மத்திய பகுதிக்கு அருகே ஒரு புயல் சின்னம் உருவாகி உள்ளது. இதன் காரணமாக வரும் இன்று முதல் வருகின்ற நாட்களில் மும்பையின் பல பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

குறிப்பாக நாசிக் நகருக்கு அதிகன மழைக்கான  ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
பால்கர், புனே, நன்துர்பார் மற்றும் துலே உள்ளிட்ட பகுதிகளுக்கு கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தின் ஒவ்வொரு நகரத்திற்கும் மஞ்சள் எச்சரிக்கை விடப்படுவதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மத்திய மகாராஷ்டிரா மற்றும் கொங்கன், கோவா பகுதிகளில் இந்த வாரம் முழுவதும் பரவலாக மிதமான மழை (சில இடங்களில்  12 செ.மீ அதிகமான மழை) பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

தெற்கு குஜராத் மற்றும் கொங்கன் மற்றும் கோவாவின் கடற்கரை பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு நீர்நிலை பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. 

ஏற்கனவே, மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக பலபகுதிகளில் மழை வெள்ளநீர் சூழ்ந்து மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IMD war Mumbai Heavy Rain Alert


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->