தமிழ்நாட்டில் 26 மாவட்டங்களில் மிதமான மழை!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு கடற்கரையை ஒட்டி வளிமண்டலத்தின் மேல் நிலவும் கீழடுக்க சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவ மழையானது இம்மாதம் 29ஆம் தேதி வாக்கில் தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் அதற்கு ஏற்றார் போல் தமிழக முழுவதும் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் 26 மாவட்டங்களில் பரவலாக மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி அரியலூர், பெரம்பலூர், கரூர், திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, சேலம், நாமக்கல், தஞ்சாவூர், கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Moderate rain fall in 26 districts in Tamilnadu


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->