தமிழ்நாட்டில் அக்.25க்குள் வடகிழக்கு பருவமழை!! வானிலை மையம் அறிவிப்பு!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் மேல் நிலவு கீழடுக்கு சூழ்ச்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் அனேக இடங்களில் கடந்த சில நாட்களாக லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. அதேபோன்று சென்னையிலும் இரவு நேரங்களில் கன மழை பெய்து வருகிறது. 

இந்த நிலையில் வரும் அக்டோபர் 22ஆம் தேதி முதல் அக்டோபர் 25ஆம் தேதிக்குள் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

இந்த காலகட்டத்திற்குள் இந்தியாவில் தென்மேற்கு பருவமழை முழுமையாக விலகி வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டிற்கு அதிகம் மழை பொழிவை தரும் வடகிழக்கு பருவமழை தொடங்க சாதகமான சூழல் நிலவுவதால் அக்டோபர் 3வது வாரத்தில் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வடகிழக்கு பருவமழையின் போது தமிழகத்தில் சராசரியாக அக்டோபர் மாதத்தில் 177.2 மில்லி மீட்டர் மழையும், நவம்பரில் 178.8 மில்லி மீட்டர் மழையும், டிசம்பர் 92 மில்லி மீட்டர் மழையும் பதிவாகும். அந்த வகையில் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காலத்தில் சராசரியாக 448 மில்லி மீட்டர் மழை பதிவாகுவது இயல்பு. 

நடப்பு ஆண்டிலும் தமிழகத்தில் சராசரி அளவு அல்லது அதைவிட கூடுதலான வடகிழக்கு பருவமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பருவமழையின் போது தான் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களுக்கு தேவையான குடிநீரை வழங்கும் பெரும்பாலான ஏரிகள் நிரப்பும். இந்த நீர் கோடை காலத்தில் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Northeast Monsoon in TamilNadu before October25


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->