மக்களே ஜாக்கிரதை!... இன்று 23 மாவட்டங்களில் வெளுக்கப்போகுது பருவமழை! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 15-ம் தேதி தொடங்கிய நிலையில், தற்போது மெல்ல மெல்ல தீவிரம் அடைந்து வருகிறது.

இந்த நிலையில், தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், தமிழகத்தில் 23 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருவாரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், சிவகங்கை, மயிலாடுதுறை,  தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, காரைக்கால், நாகப்பட்டினம், ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

People beware monsoon is going to hit 23 districts today


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->