மக்களே இன்று யாரும் வெளிய வராதீங்க!..சுட்டெரிக்க காத்திருக்கு வெப்பம்!
People do not come out today Waiting for the heat to burn
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மேற்கு திசைக் காற்றில் வேகமாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், 20 முதல் 24-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழைபெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழகத்தில் இன்று அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் வழக்கத்தை விட 7 டிகிரி பாரன்ஹீட் அளவு அதிகமாக இருக்கக்கூடும் என்றும், சென்னை மற்றும்புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், மழைக்கு வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளது.
முன்னதாக தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-4 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என்று கூறப்பட்டிருந்த நிலையில், தற்போது 7 டிகிரி பாரன்ஹீட் அளவு அதிகமாக இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால், பொது மக்கள், அலுவலகம் மற்றும் பள்ளி கல்லூரிகள் செல்வோர் கடும் அவதியடைந்துள்ளனர்.
English Summary
People do not come out today Waiting for the heat to burn