இடி, மின்னலுடன் 2 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை.! வானிலை ஆய்வு மையம்.!
Rain till 10 am in 2 districts of tamilnadu with thunder and lightning
தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 2 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை செய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவான மோக்கா புயல் காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கோடை வெயில் மத்தியில் மழை பெய்து வந்தது. ஆனால் தற்பொழுது தமிழகத்தின் பல பகுதிகளில் 100 டிகிரி செல்சியசை தாண்டி வெப்பம் கொளுத்தி வருகிறது. இந்நிலையில் மேற்கு திசை காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 5 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்தது.
இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் இரண்டு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி அடுத்த 3 மணி நேரத்தில் விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய 2 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
English Summary
Rain till 10 am in 2 districts of tamilnadu with thunder and lightning