தமிழ்நாட்டில் கன முதல் மிக கனமழை பெய்யும்!! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!! - Seithipunal
Seithipunal


தெற்கு அந்தமான் ஒட்டிய கடற்பகுதியில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்துக்குள், அதாவது நாளை காலைக்குள் தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் எனவும், இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது மேற்கு - வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து மத்திய வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வரும் நவம்பர் 16ஆம் தேதி வாக்கில் வலுவடையும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.

இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த கனமழை எச்சரிக்கை காரணமாக நாளை கடலூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu will receive heavy rain next 3hrs


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->