மக்களே உஷார்! இனிதான் மழையே..10 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்! - Seithipunal
Seithipunal


சென்னை: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 10 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் பருவமழை தொடக்கி புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி தமிழ்நாட்டில் குறிப்பாக,சென்னை,காஞ்சிபுரம்,செங்கல்பட்டு,திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய கூடும் என கூறப்படுகிறது.சென்னையின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்துவருவதால் ஆங்காங்கே மழை நீர் தேங்கியுள்ளது.

இந்தநிலையில், : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 10 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தாழ்வு மண்டலம், சென்னையில் இருந்து 440 கி.மீ, புதுச்சேரியில் இருந்து 460 கி.மீ, நெல்லூரில் இருந்து 530 கி.மீ கிழக்கு தென்கிழக்கு திசையில் மையம் கொண்டுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The depression is moving at a speed of 10 km


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->