தென் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை; சென்னை வானிலை ஆய்வு மையம்..!
Thunderstorms in the southern districts Chennai Meteorological Department
தமிழகத்தில் நேற்று முன்தினம் நிலவரத்தின்படி, தென் மாவட்டங்களில் அனேக இடங்களிலும், வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக, திருநெல்வேலி மாவட்டம் ஊத்து பகுதியில் 8 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.
இந்நிலையில் 'இன்றும், நாளையும் தென் மாவட்டங்களில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அத்துடன், வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும், நாளை தென் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வட மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதேவேளை, சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் காலை நேரத்தில் லேசான பனி மூட்டம் இருக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
English Summary
Thunderstorms in the southern districts Chennai Meteorological Department