ஈராக் || கால்பந்து மைதானம் அருகே குண்டுவெடிப்பு - 10 பேர் பலி - Seithipunal
Seithipunal


ஈராக்கில் கால்பந்து மைதானத்திற்கு அருகே நடந்த குண்டுவெடிப்பில் 10 பேர் உயிரிழந்து உள்ளனர்.

ஈராக் நாட்டின் கிழக்கு பாக்தாத் பகுதியில் அமைந்துள்ள கால்பந்து மைதானம் மற்றும் ஓட்டலுக்கு அருகிலுள்ள கேரேஜில் திடீரென வெடிகுண்டு வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. வாகனத்தில் பொருத்தப்பட்ட வெடிகுண்டு வெடித்ததால், அருகில் இருந்த எரிவாயு டேங்கரும் வெடித்து சிதறியது.

இந்த பயங்கர வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த தாக்குதலில் பாதிப்படைந்த பலர் அருகில் இருந்த மைதானத்தில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தவர்கள் என்று ராணுவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த வெடிவிபத்துக்கான காரணம் குறித்து பாதுகாப்புப் படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும், இந்த பயங்கர தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

10 killed in Bomb blast near football stadium in iraq


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->