குவாத்தமாலா: வீட்டில் சமையலறையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து.! ஒரே குடும்பத்தை சேர்ந்த 12 பேர் பலி.! - Seithipunal
Seithipunal


குவாத்தமாலாவில் வீட்டின் சமையலறையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

மத்திய அமெரிக்க நாடான குவாத்தமாலாவில் மக்டலேனா மில்பஸ் அல்டாஸில் உள்ள ஒரு வீட்டின் சமையலறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயானது கொழுந்து விட்டு எரிந்து அனைத்து இடங்களுக்கும் பரவ தொடங்கியுள்ளது. 

இதையடுத்து இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 12 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.

இதில் 4 மாத குழந்தை முதல் 14 வயதுடைய சிறுவர்கள் சிறுமிகள் என 6 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த தீ குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

12 people lost their lives in a kitchen fire at home in Guatemala


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->