123.2 கி.மீ. தொலைவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!...பொதுமக்களின் கதி என்ன?
123 and 2 km a powerful earthquake in the distance what is the fate of the common people
பப்புவா நியூ கினியாவில் இன்று காலை 123.2 கி.மீ. தொலைவிற்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
பப்புவா நியூ கினியா நாட்டில் உள்ள நியூ அயர்லாந்து பகுதியில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் அங்குள்ள மக்கள் பீதி அடைந்தனர். இந்திய நேரப்படி இன்று காலை 10.58 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது, நியூ அயர்லாந்து பகுதியில் இன்று காலை 10.58 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், இது ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவானதாக தெரிவித்துள்ளது.
மேலும், இந்த நிலநடுக்கம் 51 கிலோமீட்டர் ஆழத்தில் இருந்ததாகவும், அருகிலுள்ள நகரமான கோகோபோவில் இருந்து சுமார் 123.2 கி.மீ. தொலைவில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த விவரங்கள் தற்போது வரை வெளியாகவில்லை. மேலும், நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
123 and 2 km a powerful earthquake in the distance what is the fate of the common people