மொராக்கோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - அதிரவைத்த உயிரிழப்பு எண்ணிக்கை.! - Seithipunal
Seithipunal


மொராக்கோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - அதிரவைத்த உயிரிழப்பு எண்ணிக்கை.!

அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் மத்திய தரைக்கடலின் எல்லையில் அமைந்துள்ள வடஆப்பிரிக்க நாடான மொரோக்கோவில் நேற்று முன்தினம் இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

அந்நாட்டின் தெற்கில் உள்ள மராகேஷ் நகரை மையமாக கொண்டு உண்டான இந்த நிலநடுக்கம் நகரில் இருந்து 71 கிலோமீட்டர் தூரத்தில் தென்மேற்கே உள்ள ஹைஅட்லஸ் மலைகளில் 18.5 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7 ஆக பதிவானது என மொரோக்கோவின் தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. இரவு நேரத்தில் மக்கள் தூங்கி கொண்டிருந்த நிலையில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் பலரால் வீடுகளை விட்டு உடனடியாக வெளியேற முடியவில்லை. 

இதனால் கட்டிட இடிபாடுகளில் ஏராளமானோர் சிக்கிக் கொண்டனர். மேலும், வீடுகளை விட்டு வெளியேறிய ஆயிரக்கணக்கான மக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலையில், மொரோக்கோ நிலநடுக்கத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 1300-ஐ கடந்துள்ளது.

இதேபோல், இந்த நிலநடுக்கத்தில் சிக்கி சுமார் 1800க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். irupinum, கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர், தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

1300 peoples died in moracco for earthquake


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->