பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் 20 பேர் கைது; 20 வெடிகுண்டுகள், 06 கிலோ வெடிமருந்து பறிமுதல்..!
20 terrorists arrested in Pakistan
பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல் அதிகரித்துள்ளது. குறிப்பாக ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல் மேலும் அதிகரித்துள்ளது.
குறிப்பாக பயங்கரவாதிகள் எல்லையோர மாகாணங்களில் அடிக்கடி தாக்குதல் நடத்துகின்றனர்.
இதற்கிடையே பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக அந்நாட்டு உளவுத்துறைக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, அந்நாட்டு போலீசார் அங்கு தீவிர ரோந்து பணியை மேற்கொண்டனர்.
இதில் தெஹ்ரீக்-இ-தலீபான் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 20 பேர் கைது செய்யப்பட்டனர். அத்துடன், அவர்களிடம் இருந்து 06 கிலோ வெடி மருந்து மற்றும் 20 வெடிகுண்டு போன்றவை கைப்பற்றப்பட்ட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனால் பாகிஸ்தானில் நடைபெற இருந்த பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
English Summary
20 terrorists arrested in Pakistan