பூமியை கடந்து செல்லும் 3 பெரிய விண்கற்கள்- வெளியான அதிர்ச்சி தகவல்! - Seithipunal
Seithipunal


அமெரிக்க விண்வெளி கழகம் நாசா, பூமியை 3 பெரிய விண்கற்கள் மிக நெருக்கமாக கடந்து செல்ல இருப்பதாக அறிவித்துள்ளது. 

இந்த விண்கல் 110 அடி விட்டம் கொண்டது. பூமியிலிருந்து 7.31 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் இது கடந்து செல்கிறது. இதுவரை இதன் பாதை நெறிப்படுத்தப்பட்டுள்ளது, ஆனால் கடைசி நேரத்தில் பாதையில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால், அதனால் பூமிக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இந்த விண்கல் 42 லட்சம் கி.மீ தொலைவில் கடந்து செல்ல இருக்கிறது. இதனால் பூமிக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். 

அச்சத்தை ஏற்படுத்தும் இந்த விண்கல் 500 அடி விட்டம் கொண்டது. இது பூமியிலிருந்து சுமார் 30 லட்சம் கி.மீ தொலைவில் மணிக்கு 33,947 கி.மீ வேகத்தில் பயணிக்கிறது. இதன் பாதையில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால், அது விழுந்த இடத்தில் மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

விண்கல் பூமியை மோதினால், அதன் தாக்கத்தில் 2 கி.மீ ஆழம் மற்றும் 4 கி.மீ அகலத்திற்கு பள்ளம் உருவாகும். தாக்கம் ஏற்பட்ட இடத்திலிருந்து 500 முதல் 1000 கி.மீ சுற்றளவுக்குள் உள்ள அனைத்து கட்டிடங்களும் அழிந்துவிடும். நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு, சுனாமி போன்ற பெரிய பேரழிவுகளும் ஏற்படும். 

விஞ்ஞானிகள் இதன் பாதை குறித்தும் ஆராய்ந்து வருகிறார்கள், ஆனால் இதுவரை எந்தவிதமான ஆபத்தும் இல்லை என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர். விண்கற்கள் செல்லும் பாதையில் குறுக்கே எதுவும் இல்லாததால், பூமிக்கு இதுவரை எந்தவிதமான தாக்கமும் ஏற்படாது என நாசா அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

3 Biggest Meteors to Pass Earth NASA Information


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->