பாகிஸ்தானில் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்! டெல்லியில் பல இடங்களில் அதிர்வு!
5.8 magnitude earthquake in Pakistan Vibration in many places in Delhi
இன்று நண்பகல் 12.58 மணியளவில் பாகிஸ்தானில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் நிலநடுக்கம் 5.8-ஆகப் பதிவாகியுள்ளது. இந்திய நிலநடுக்க ஆராய்ச்சி மையம் பூமிக்கு அடிபகுதி 33 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தானின் பெஷாவர், இஸ்லாமாபாத் மற்றும் லாகூர் மாகாணங்களில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியாவில் உள்ள எல்லையோர மாநிலங்களிலும் கடுமையாக நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளது. பின்னர் இதேபோல் இந்தியாவின் தலைநகரான டெல்லியில், உத்தரப் பிரதேசம், அரியானா, பஞ்சாப் மற்றும் ஜம்மு - காஷ்மீரில் உள்ள சில இடங்களில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து, பொதுமக்கள் அலுவலகங்கள் மற்றும் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர்.
டெல்லியில் கடந்த இரண்டு வாரங்களில் 2வது முறையாக இந்த நிலநடுக்கம் உணரப்படுகிறது. ஆக 29-ம் தேதி அன்று ஆப்கானிஸ்தானில் 5.7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் டெல்லியில் பல பகுதிகளில் நில அதிர்வுகள் உணரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
English Summary
5.8 magnitude earthquake in Pakistan Vibration in many places in Delhi