உக்ரைனில் இருந்து இதுவரை 6.6 லட்சம் பேர் வெளியேற்றம்-ஐநா தகவல்.! - Seithipunal
Seithipunal


உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா நடத்திவரும் தாக்குதலுக்கு பயந்து உக்ரைனில் இதுவரை 6.6 லட்சம் பேர் வெளியேறி உள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐ.நா. அகதிகள் நல அமைப்பின் செய்தித் தொடா்பாளா் ஷாபியா மான்டூ செவ்வாய்க்கிழமை கூறியதாவது: உக்ரைனில் ரஷ்ய தாக்குதல் நடத்த தொடங்கியதிலிருந்து சுமார் 6.6 லட்சம் பேர் அந்த நாட்டில் இருந்து வெளியேறி அண்டை நாடுகளுக்கு அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர்.

இந்த குறுகிய காலத்தில் இத்தனை பேர் இடம்பெயர்ந்து வருவது இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய அகதிகள் நெருக்கடியை ஏற்படுத்தும் சூழலை உருவாக்கியுள்ளது.

மேலும் உக்ரைனில் இருந்து வெளியேறும் அகதிகளை அண்டை நாடுகள் தாராள மனதுடன் ஏற்க வேண்டும் என்றும் ஐநா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

6.6 refugees out in Ukraine


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->