விமானம் நடுவானில் குலுங்கியதால் 7 பேருக்கு படுகாயம்!
7 people were seriously injured as the plane shook in mid-air
அமெரிக்காவின் சிகாகோ நகருக்கு மெக்சிகோவின் கான்கன் விமான நிலையத்தில் இருந்து யு.ஏ-1196 என்ற பயணிகள் விமானம் புறப்பட்டது. போயிங் 737-900 விமான நிறுவனத்துக்குச் சொந்தமான அந்த விமானத்தில் ஊழியர்கள் உள்பட 179 பேர் பயணித்தனர்.
அந்த விமானம் லூசியான நகரம் அருகே சென்றபோது திடீரென நடுவானில் குலுங்கியதால் பயணிகள் தங்களது இருக்கையில் இருந்து நகர்ந்து முன் இருக்கை மீது மோதினர். இதனால் பயணிகள் பயந்துபோய் கத்தி சத்தம் போட்டனர்.
இதனை தொடர்ந்து, விமானி கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டு பேசினார். அப்பொழுது டென்னசி விமான நிலையத்தில் தரையிறங்கும்படி அறிவுறுத்தப்பட்டது. அதன்படி அந்த விமானம் அவசரமாக டென்னசி விமான நிலையத்தில் தரையிறங்கியது. அங்கு தயாராக இருந்த மீட்பு குழுவினர் படுகாயம் அடைந்த 7 பயணிகளை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
மேலும் விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். இதனையடுத்து வேறொரு விமானம் மூலம் பயணிகளை சிகாகோவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.இந்த சம்பவத்தால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது . பிறகு விமானியின் சாதுர்யத்தால் பயணிகள் அனைவரும் உயிர் தப்பினர்.
இந்நிலையில்,விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் இத சம்பவத்தை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
7 people were seriously injured as the plane shook in mid-air