ரஷ்யா-கிரீமியா இணைப்பு பாலம் குண்டு வெடிப்பு தொடர்புடைய 8 பேர் கைது.!
8 people arrested in connection with Russia Crimea connection bridge blast
உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையேயான போர் 8 மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உக்ரைன் படைகள் ரஷ்ய கட்டுப்பாட்டிலிருந்து கெர்சன், ஜபோரிஜியா உள்ளிட்ட முக்கிய நகரங்களை மீண்டும் கைப்பற்றியுள்ளன.
மேலும் தொடர்ந்து முன்னேறி வரும் உக்ரைன் படைகள், ரஷ்யா மற்றும் கிரீமியாவை இணைக்கும் முக்கிய பாலத்தின் மீது குண்டுவெடிப்பு தாக்குதலில் சாலைகள் மற்றும் ரயில் பாதைகளும் சேதமடைந்துள்ளன. 7 ரயில் பெட்டிகள் சாம்பலாயின.
இதையடுத்து ரஷ்யா மற்றும் கிரீமியா பகுதிகளுக்குச் செல்லும் பாலம் மற்றும் எண்ணெய் குழாய் பகுதிகளுக்கும், பாலத்திற்கு பாதுகாப்பை பலப்படுத்த ரஷ்ய அதிபர் புடின் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் குண்டு வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய 8 பேரை ரஷ்யா கைது செய்துள்ள நிலையில், இந்த தாக்குதலுக்கு உக்ரைன் உளவு அமைப்பே காரணம் என்று ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.
மேலும் தாக்குதலுக்காக பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள் உக்ரைனின் ஒடிசா துறைமுகத்திலிருந்து வெளியே கொண்டு வரப்பட்டு பல்கேரியா, ஜார்ஜியா மற்றும் ஆர்மீனியா ஆகிய நாடுகளின் வழியாக ரஷ்யாவை வந்தடைந்தாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
English Summary
8 people arrested in connection with Russia Crimea connection bridge blast